மாணவர் சீருடையில் ஜனாதிபதியிடம் நல்லாசிரியர் விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்!!
மாணவர் சீருடையில் ஜனாதிபதியிடம் நல்லாசிரியர் விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் போகளூரைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் மாணவர்கள் அணியும் சீருடையில் தேசிய நல்லாசிரியர் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் பெற்றார். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 46 பேருக்கு இன்று விருது வழங்கப்பட்டது.
கற்றலை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், புதுமையான சோதனைகள், கூடுதல் மற்றும் இணை பாடத்திட்ட செயல்பாடுகளின் அமைப்பு, கற்பித்தல், கற்றல் பொருட்களின் பயன்பாடு, சமூக இயக்கம், அனுபவ கற்றலை உறுதி செய்தல் மற்றும் உடற்கல்வியை உறுதி செய்வதற்கான தனித்துவமான வழிகள் உள்ளிட்ட செயல்திறன் அடிப்படையில் ஆசிரியர்கள் மதிப்பீடு செய்யப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து நடப்பாண்டில் ஒருவருக்கு மட்டுமே விருது கிடைத்துள்ளது.