Video: சட்டப்பேரவையில் இருந்து வேக வேகமாக வெளியேறிய ஆளுநர்

இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் உரையைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த நிலையில், அவையை விட்டு ஆளுநர் வேக வேகமாக வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First Published Jan 9, 2023, 2:00 PM IST | Last Updated Jan 9, 2023, 2:00 PM IST

ஒவ்வொரு ஆண்டும், ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் மாநில ஆளுநரின் உரையுடன் தொடங்கப்படுவது தான் மரபு. மேலும், மாநில அரசு சார்பில் வழங்கப்படும் உரையை தான் ஆளுநரும், சட்டப்பேரவையில் வாசிப்பார். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

கூட்டத்தொடரில் ஆளுநர், ஆர்.என்.ரவி கலந்துகொண்டு உரையாற்றினார். ஆனால், தமிழக அரசு சார்பில் தயாரித்துக் கொடுக்கப்பட்டிருந்து உரையில் இடம் பெற்றிருந்த திராவிட மாடல் ஆட்சி, திராவிடம் உள்ளிட்ட ஒருசில வார்த்தைகளை உச்சரிக்க மறுத்துவிட்டார். மேலும் ஆளுநர் தாமாக அந்த உரையில் சில வார்த்தைகளை சேர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆளுநரின் உரையை தொடர்ந்து முதல்வர் பேசுகையில், தமிழக அரசு சார்பில் அச்சிடப்பட்டு, சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட உரையை மட்டும் தான் குறிப்பேட்டில் கொள்ளவேண்டும் என்ற தீர்மானத்தை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆளுநர் அவை முடிவடைவதற்கு முன்னதாக தாமாகவே எழுந்து வேக வேகமாக அவையில் இருந்து வெளியேறினார்.

Video Top Stories