Loksabha Election : நாடாளுமன்ற தேர்தல்.. விழிப்புணர்வு பாடலை வெளியிட்ட தேர்தல் ஆணையம் - யார் குரலில் தெரியுமா?

Loksabha Election : நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் தமிழக தேர்தல் ஆணையம், ஓட்டு போடுவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

First Published Apr 11, 2024, 5:07 PM IST | Last Updated Apr 11, 2024, 5:07 PM IST

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் மாதம் முதல் தேதி வரை இந்தியா முழுவதும் சுமார் 500க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஏழு கட்டமாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது. அதன் பிறகு ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் 40 தொகுதிகளுக்கும் நடத்தப்பட்டுள்ளது. 

இடைத்தேர்தலும் இடைப்பட்ட நாளில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் தற்பொழுது ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தனது ஜனநாயக கடமையான ஓட்டு போடுதல் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் தமிழக தேர்தல் ஆணையம் ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளது.

பிரபல நடிகர் காளி வெங்கட் நடிக்க சூப்பர் சிங்கர் மூலம் புகழ் பெற்ற கிராமிய பாடல் கலைஞர்களான செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர் இந்த பாடலை பாடியுள்ளனர். இப்பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்போம் பெற்று வருகிறது. மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை சிறப்பாக செய்ய தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.