வீட்டை விட்டு வெளியே வராதவர் ஸ்டாலின்.. திருப்பூரில் செய்தியாளர் சந்திப்பு - எதிர்கட்சிகளை விளாசிய அண்ணாமலை!

BJP Leader Annamalai : கொங்கு நாடு மக்கள் முன்னேற்ற கழக கட்சி நிறுவனர் ராமசாமியை நேரில் சந்தித்து இன்று பேசியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.

First Published Mar 17, 2024, 7:55 PM IST | Last Updated Mar 17, 2024, 7:55 PM IST

கொங்கு நாடு மக்கள் முன்னேற்ற கழகம் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆதரிப்பதாக அறிவித்ததை அடுத்து அதன் நிறுவனர் பெஸ்ட் ராமசாமி திருப்பூர் ராயபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். 

வீட்டை விட்டு வெளியே வராதவர் முதல்வர் ஸ்டாலின். பிரதமர் கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழகத்திற்கு தொடர்ந்து வருகை புரிகிறார். அவையெல்லாம் தேர்தலை மனதில் வைத்து அல்ல. எனவே பிரதமர் வருகையை தேர்தல் தேதியோடு ஒப்பிடுவது தோல்விக்கு எதிர்கட்சிகள் காரணத்தை இப்போதே தேடி விட்டதாக தெரிகிறது என்றார்

கோவையில் பிரதமர் சந்திப்பு நிகழ்வை திமுக தடை விதிக்க நினைக்கிறது எல்லா மாநிலத்திலும் பிரதமர் மக்களை சந்திக்கிறார். பி.எம் ஸ்ரீ பள்ளி திட்டத்திற்கு கையெழுத்து போடுவார்கள் ஆனால் புதிய கல்வி  கொள்கையை ஏற்க மாட்டோம் என சொல்வது ஏற்கத்தக்கதல்ல. தேர்தல் முடிந்ததும் வேறு காரணம் சொல்லி ஏற்றுக்கொள்வார்கள்.

ஆ. ராசா 2 ஜி வழக்கு ஏப்ரல் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில்  தீர்ப்பு வரலாம் ,  அதன் பிறகு நான் சொன்னதை வைத்து முடிச்சு போடாதீர்கள். தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் மோடி வருகை புரிய வேண்டும் என்பது எங்கள் விருப்பம் தேதி கொடுக்க பிரதமரும் தயாராக இருக்கிறார். விரைவில் திருப்பூருக்கு மோடி வருகை புரிவார் என எதிர்பார்க்கிறோம். இந்தியா கூட்டணிக்கு, எங்கேயும் எழுச்சி இல்லை, ஜெய்ஸ்ரீராம், கோஷம் தான் எழுகிறது, என்றார் அவர்.

Video Top Stories