மக்களவை தேர்தல்.. கோவையில் போட்டியிடும் அண்ணாமலை - வெடி வெடித்து நடமாடி, கொண்டாடும் பாஜக தொண்டர்கள்!

Annamalai In Coimbatore : கோவை மக்களவைத் தொகுதியில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து நடனமாடி கொண்டாடியுள்ளனர். 

First Published Mar 21, 2024, 10:30 PM IST | Last Updated Mar 21, 2024, 10:30 PM IST

தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 9 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்களை வெளியிடபட்டத்தில் கோவை மக்களவை தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

கோவை தெற்கு தொகுதியில் ஏற்கனவே பாஜக சட்டமன்ற உறுப்பினராக வானதி சீனிவாசன் இருக்கும் நிலையில் மக்களவைத் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதால் அண்ணாமலை நேரடியாக களம் காண்கிறார். இந்நிலையில் கோவை மக்களவைத் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சிங்காநல்லூர், வரதராஜபுரம் பகுதியில் பாஜக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து,மேளதாளம் முழங்க நடனமாடி கொண்டாடினர்.

Video Top Stories