Viral Video : மாணவர் கேங் மோதல்! - திருவண்ணாமலை அரசு பள்ளியில் பிரச்சனை!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சாலையில் அமைந்துள்ள சண்முகா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு முன்பாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

First Published Jul 28, 2022, 9:15 PM IST | Last Updated Jul 28, 2022, 9:15 PM IST

செங்கம் சாலையில் செயல்பட்டு வரும் சண்முகா மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‌மாணவ, மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை முன்விரோத காரணமாக மாணவர்கள் இருதரப்பினரிடையே வகுப்பறைக்குள் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, கடந்த திங்கள் கிழமை மாலை பள்ளி முடிந்து வெளியே வந்த மாணவர்கள் இரு தரப்பினர் மீண்டும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கித் தொடங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மேலும், இதுதொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், இன்று சண்முகா அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை அதிகாரிகள் சார்பில் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.