திருப்பத்தூர் அருகே ஐந்து அடி அளவிலான பள்ளம் ஏற்படுத்திய மர்ம பொருள் "எரிக்கல்"?

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் சொட்டை கவுண்டர் பகுதியில் ரவி என்பவருடைய நிலத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மர்ம பொருள் ஒன்று விழுந்துள்ளது அதன் காரணமாக சுமார் ஐந்து அடி அளவிலான பள்ளம் உருவாகியுள்ளது.
 

First Published May 28, 2024, 9:07 AM IST | Last Updated May 28, 2024, 9:07 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் சொட்டை கவுண்டர் பகுதியில் ரவி என்பவருடைய நிலத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மர்ம பொருள் ஒன்று விழுந்துள்ளது அதன் காரணமாக சுமார் ஐந்து அடி அளவிலான பள்ளம் உருவாகியுள்ளது. இதனை அதே பகுதியைச் சேர்ந்த திருமலை என்பவர் பார்த்துள்ளார் ஆனால் ஏதோ சாதாரண பள்ளம் என்று நினைத்து விட்டுவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் திரும்பவும் அதே இடத்திற்கு சென்ற திருமலை அந்தப் பள்ளத்தை பார்க்கும்போது அந்த பள்ளத்திலிருந்து அதிக வெப்ப அனல் வெளியாகியுள்ளது ஊர் மக்களிடம் கூறுகையில் அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர் மேலும் மர்ம பொருள் என்னவென்று தெரியாமல் பீதியும் அடைந்தனர். இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார் மேலும்  மாவட்ட அறிவியல் மையம் அலுவலருக்கு விழுந்த மர்ம பொருள் என்னவென்று கண்டறிய வேண்டும் எனவும் பரிந்துரை செய்தார்.

Video Courtesy | DD Tamil

Video Top Stories