சிதைந்த வீடு.. கூரைக்கு கீற்று கூட விட முடியாமல் தவித்த மூதாட்டி - சமூக ஆர்வலர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

House for Old Lady in Mayiladuthurai : கணவனை இழந்து, தனிமையில் வீடு இன்றி வாடி வந்த மூதாட்டிக்கு புதிய வீடு ஒன்றை கட்டிக்கொடுத்துள்ளார் சமூக ஆர்வலர் ஒருவர். 

First Published Mar 17, 2024, 5:04 PM IST | Last Updated Mar 17, 2024, 5:04 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி கிராமத்தில் உள்ள மேலத்தெருவில் வசித்து வந்தவர் இராமையன். இவர் இறந்த பிறகு அவரது மனைவி சுசிலா (வயது 65), குடிசை வீட்டில் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வந்துள்ளார். வீட்டின் கூறையை மாற்ற கூட வழி இல்லாத அவரது நிலைய அறிந்த பாரதி மோகன் என்ற சமூக ஆர்வலர், தன் நண்பர்கள் உதவியுடன் களத்தில் இறங்கியுள்ளார். 

சிமெண்ட சிலாப் சுவர் எழுப்பி, மேற்கூறையை சிமென்ட் சீட்டு போட்டு, சுமார் 2 லட்சம் ரூபாயில் புதிய வீடு கட்டி கொடுத்துள்ளார். அந்த வீட்டுக்கு இன்று திறப்பு விழா நடைபெற்றது, இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு அந்த ஏழை மூதாட்டிக்கு வீடு கட்டி கொடுத்த சமூக ஆர்வலர் பாரதிமோகனுக்கு  பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Video Top Stories