கல்லூரி பேருந்தும் சரக்கு லாரியும் பயங்கரமாக மோதி விபத்து சூளகிரி அருகே அதிர்ச்சி : வீடியோ

கல்லூரி பேருந்தும் சரக்கு லாரியும் பயங்கரமாக மோதி விபத்து சூளகிரி அருகே அதிர்ச்சி : வீடியோ

First Published Mar 20, 2019, 1:52 PM IST | Last Updated Mar 20, 2019, 1:52 PM IST

 கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேருந்து இன்று காலை ஓசூரில் இருந்து 30 மாணவ மாணவிகளுடன் கிருஷ்ணகிரி நோக்கி புறப்பட்டது. பேருந்து சூளகிரி அருகே உள்ள கோபசந்திரம் என்ற இடத்தில் வரும்போது , முன்னால் மெதுவாக ஊர்ந்து சென்ற சரக்கு லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பஸ் ஓட்டுநர் கோபால் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

மேலும் பேருந்தில் பயணம் செய்த 30 மாணவிகளில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் மற்றும் சூளகிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் . இதனால் சக மாணவிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

 

Video Top Stories