மக்கள் நடமாட்டத்தை குறைக்க சேலம் மாநகர காவல்துறை அதிரடி நடவடிக்கை..! வீடியோ
இன்னும் தொடர்ந்து மக்கள் வாகனங்களில் வெளியே சுற்றிக் கொண்டிருப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில் சேலம் மாநகர காவல்துறை புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது..
சேலம் மாநகரில் இரண்டு சக்கர நான்கு சக்கர வாகனங்களின் செல்பவர்களின் வாகனங்களில் காவல்துறையினர் தினம் ஒரு கலராக ஐந்து நாட்களுக்கு ஐந்து கலர்களை அடையாளமாக வாகனத்தின் மீது பூசுவார்கள்.
முதலில் மஞ்சள் வர்ணம் பூசப்பட்டது. இதைத்தொடர்ந்து அடுத்து ஐந்து நாட்கள் கழித்துதான் மஞ்சள் வர்ணம் பூசப்பட்ட வாகனங்கள் வெளியே வரவேண்டும் அதை மீறி ஐந்து நாட்களுக்குள்ளாகவே மஞ்சள் வர்ணம் பூசிய வாகனங்கள் வெளியே வந்தாள் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளுக்காக ஐந்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வெளியே வந்து பொருட்களை வாங்கி பாதுகாப்புடன் இருந்து காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அப்போது தான் கொரோனா பிடியிலிருந்து மீண்டு விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்பது அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.