Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்துகிறார் பிரதமர் மோடி.. மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு !!

உலகிற்கு எடுத்துகாட்டாக ஊழலற்ற உன்னதமான ஆட்சியை பாஜக அரசு நடத்தி வருகிறது. தமிழகத்தின் மீது பிரதமர் மோடி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

First Published Nov 12, 2022, 7:20 PM IST | Last Updated Nov 12, 2022, 7:20 PM IST

சென்னையில் இன்று நடைபெற்ற இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பவள விழா நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக் கொண்டார். அதில் பேசிய அவர், ‘இந்தியா சிமெண்ட்ஸ் 75 ஆண்டுகள் நிறைவு செய்ததற்காக அந்நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். விளையாட்டு துறையில் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது எங்கள் நட்பு வளர்ந்தது. விளையாட்டு வீரர்கள் நலன் மற்றும் உயர்வுக்காக பாடுபட்டவர் சீனிவாசன். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மிகப்பெரிய இலக்கை எட்டியுள்ளது.

வளர்ச்சி என்பது நாட்டின் கட்டமைப்பை பொறுத்து அளவிடப்படுகிறது. தரமான கட்டமைப்புக்கு அடிப்படையானது சிமெண்ட். இந்தியா சிமெண்ட்ஸின் தற்போதைய வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றியவர் சீனிவாசன். பொருளாதார வளர்ச்சியில் 11வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. 5வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு செல்ல கட்டமைப்பு மிக முக்கியமானதாக உள்ளது.

வளர்ச்சி அடைந்த நாடுகள் பட்டியலில் 3வது இடத்தை பிடிக்க இந்தியா தீவிரமாக முயன்றுள்ளது. மத்திய பாஜக அரசு பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. புதிய தொழில்நுட்பம், கட்டமைப்புகளை உருவாக்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  உலகிற்கு எடுத்துகாட்டாக ஊழலற்ற உன்னதமான ஆட்சியை பாஜக அரசு நடத்தி வருகிறது. தமிழகத்தின் மீது பிரதமர் மோடி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். தமிழகத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களை கூர்ந்து கவனித்து வருகிறார்’ என்று பேசினார்.

இதையும் படிங்க..உச்சநீதிமன்ற உத்தரவு - நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 5 பேர் விடுதலை !

இதையும் படிங்க..அதிமுக உடன்பிறப்புகளே.! களத்தில் குதியுங்கள்.! அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

Video Top Stories