Watch : மின் கட்டண உயர்வைக் கண்டித்து திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்!!
திருச்சி மாநகர மாவட்ட கழகம் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, மின் கட்டண உயர்வை அறிவித்துள்ள தமிழக அரசை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாநகர் மாவட்ட கழக அவை தலைவர், மலைக்கோட்டை ஐயப்பன் தலைமையில், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன், மாவட்ட மாணவரணி செயலாளர், ஆவின் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ,மின் கட்டணம் உயர்வு, மின் வெட்டு காரணமான தமிழக அரசை கண்டித்தும்,
சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, கழிவு நீர் இணைப்புக் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கட்ட வரி உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாணவர் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பகுதி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று தமிழகம் முழுவதும் மின் கண்டன உயர்வை கண்டித்து அதிமுக தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.