சைக்கிளுக்கு ஹெல்மெட் கேட்ட காவலர்.. குழம்பிப்போய் நீண்ட நேரம் நின்ற சிறுவன்..! பரபர வீடியோ
சைக்கிளில் சென்ற பள்ளி மாணவனை காவலர் ஒருவர் ஹெல்மெட் இல்லை என்பதற்காக வழிமறிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர் அப்போது, அவ்வழியாக தமிழக அரசு வழங்கிய மிதி வண்டியை பள்ளி மாணவனை ஓட்டிக்கொண்டு வந்துள்ளான் அப்போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணி வழிமறித்தார். பின்னர், மாணவன் ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்லவில்லை என கூறி அபராதம் வழங்க வற்புறுத்தி, மாணவனின் சைக்கிளை அவர் பறிமுதல் செய்தார்.
நீண்ட நேரம் அந்த சிறுவன் காத்துகொண்டு இருந்துள்ளான் பின்னர், மாணவனையும் அவர் ஓட்டி வந்த சைக்கிளையும் காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணி அனுப்பி வைத்துள்ளார் . மேலும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள எந்த காவல்நிலையத்திலும் சுப்பிரமணி ஆறுமாதங்களுக்கு மேல் பணியாற்றியது இல்லை எனவும் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படாத காரணத்தினால் பல காவல் நிலையங்களுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.