Watch : ''மறக்கமுடியாத சென்னை பயணம்'' - பிரதமர் மோடி டுவீட்!

இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த பிரதமர் மோடி, செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார். அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவிலும் கலந்துகொண்டார். இந்த பயணம் மறக்கமுடியாத பயணமாக இருந்ததாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
 

First Published Jul 29, 2022, 4:50 PM IST | Last Updated Jul 29, 2022, 4:50 PM IST

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்ததன் பேரில், 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று தனி விமானம் மூலம் சென்னை வந்தார். தொடர்ந்து, செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்ததோடு கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தார்.

2வது நாளான இன்று, அண்ணா பல்கலைகழக பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அண்ணா பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா அரங்கில் இட நெருக்கடி காரணமாக பல வகுப்பறைகளில் பட்டதாரி மாணவர்கள் அமரவைக்கப்பட்டனர். விழா முடிவடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, பட்டதாரி மாணவர்கள் அமர்ந்திருந்த ஒவ்வொரு வகுப்பறைகளுக்கும் சென்று அவர்கள் சந்தித்து ஓரிரு வார்த்தைகள் பேசினார்.

இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார். இந்த சென்னை பயணம் மறக்கமுடியாத பயணாக அமைந்ததாக பிரதமர் மோடி டுவீட் செய்துள்ளார்.

 

 

 

Video Top Stories