Viral Video : மின்சாரம் குறித்து புகாரளித்த பெண் மீது மீன் மீட்டர் எறிந்து தாக்கிய மின்வாரிய ஊழியர் சஸ்பெண்ட்!
மின் இணைப்பு தொடர்பாக பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தவர்கள் மீது மின்மீட்டரை தூக்கி அடித்த மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தீர்த்தகிரி நகரை சேர்ந்த பெண்மனி ஒருவர் நேற்று பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்திற்க்கு வந்து தன் பகுதியில் மின்இணைப்பு இல்லை என புகார் அளித்துள்ளார். அப்போது, அங்கிருந்து மின்வாரிய ஊழியருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் கோபமடைந்த மின் ஊழியர் அங்கிருந்து மின் மீட்டரை பொதுமக்கள் மீது வீசியுள்ளார்.
இந்த சம்பவத்தை செல்போனில் படம் பிடித்த பொதுமக்கள், சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இதனிடையே மின்மீட்டரை தூக்கியடித்த மின்வாரிய ஊழியர் குப்புராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக பாலக்கோடு உதவி செயற்பொறியாளர் வனிதா தெரிவித்துள்ளார்.