திருப்பூர் அருகே தலைகீழாக கவிழ்ந்த அரசுப் பேருந்து: 30 பேர் காயம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சனுப்பட்டி வல்லகுண்டபுரத்தில் அரசு பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்ததில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்.
 

First Published Sep 29, 2022, 10:37 AM IST | Last Updated Sep 29, 2022, 10:37 AM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்து சனுப்பட்டி வல்லகுண்டபுரம் உள்ளது இன்று மாலை 4 மணியளவில் உடுமலையிலிருந்து புறப்பட்ட நகரப் பேருந்து பெதப்பம்பட்டி சனுப்பட்டி அருகே வந்து கொண்டிருந்த பொழுது  திடீரென நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தது இதில் பள்ளி மாணவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த இரண்டு பேர் உடுமலை தனியார் மருத்துவமனையிலும் காயம் அடைந்த அனைவரும் உடுமலை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் விபத்து குறித்து குடிமங்கலம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Video Top Stories