Watch : பருவமழை முன்னெச்சரிக்கை : மழைநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் தீவிரம்!
வடக்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரத்தில் மழைநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி மேயர் ஆய்வு மேற்கொண்டார்.
இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சதாவரம் பகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் கால்வாய்களை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு தூர்வாரும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.