ஒப்புதல் அளித்துவிட்டு மாற்றிப் பேசுவதா? ஆளுநருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநருக்கான உரை முன்னதாகவே நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது. ஆனால், தற்போது அந்த உரையை மாற்றிப் பேசுவது கண்டனத்திற்குரியது என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

First Published Jan 9, 2023, 3:46 PM IST | Last Updated Jan 9, 2023, 3:46 PM IST

இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநருக்கான உரை ஏற்கனவே அவருக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் அளித்த பின்னரே அது சட்டமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், ஒப்புதல் அளித்த உரையை ஆளுநர் மாற்றிப் பேசியுள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்னதாகவே ஆளுநர் அவசரம் அவசரமாக அவையை விட்டு வெளியேறி தேசிய கீதத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளாா்.

Video Top Stories