தமிழகத்தில் புதிதாக 4 நடமாடும் உணவு ஆய்வகங்கள்; அமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் நாளுக்கு நாள் உணவகங்கள் மீது எழும் புகாரைத் தொடர்ந்து புதிதாக 4 நடமாடும் பகுப்பாய்வகங்களை தொடங்கி வைத்தார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

First Published Jan 12, 2023, 5:20 PM IST | Last Updated Jan 12, 2023, 5:20 PM IST

தமிழகத்தில் நாளுக்கு நாள் உணவகங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த உணவகங்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரமும் கேள்விக்குறியாகி வருகிறது. அதன்படி உணவு பொருட்களில் புழு, பூச்சிகள் இருப்பதாகவும், கெட்டுப்போன மற்றும் காலாவதியான உணவு பொருட்களை விநியோகம் செய்வதாகவும் நாளுக்கு நாள் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் ஏற்கனவே 6 உணவு பகுப்பாய்வகங்கள் உள்ள நிலையில், மேலும் 4 புதிய நடமாடும் பகுப்பாய்வகங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Video Top Stories