Watch : பாளையங்கோட்டையில் பக்கவிளைவுகள் குறித்த மருத்துவ விழிப்புணர்வு பேரணி!
பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி சார்பில் தவறாக மருந்துகள் உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
தேசிய மருந்துகளின் எதிர்விளைவு கண்காணிப்பு வாரம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது இதன் ஒரு பகுதியாக அரசு சித்த மருத்துவ கல்லூரி ஆயுஷ் மருந்துகளின் எதிர்விளைவு கண்காணிப்பு துறை சார்பில் இன்று தவறாக மருந்து உட்கொள்ளும் போது ஏற்படும் எதிர்விளைவுகள் மற்றும் அதனை மருத்துவப் பணியாளர்களிடம் பதிவு செய்தல் போன்றவை பற்றி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்த மரியா, துணை முதல்வர் டாக்டர் செளந்தரராஜன் ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர் சித்தா கல்லூரியில் தொடங்கிய பேரணி வ.உ.சி மைதானம் வழியாக சென்று மீண்டும் கல்லூரியில் பேரணி முடிவடைந்தது இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றன் பேரணியின் போது விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.