என் ஏரியாவுக்குள்ள வந்து என்னுடைய ஆசிரியரை அவமானப்படுத்திட்டு போயிருக்க! சும்மா விட மாட்டேன்!
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பிற்போக்குத்தனமான சொற்பொழிவு தட்டிக்கேட்ட ஆசிரியரை மிரட்டும் வகையில் பேசிய சொற்பொழிவாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு ஊக்கமளிக்க பரம்பொருள் அறக்கட்டளை என்ற அமைப்பைத் தொடங்கி, இயங்கி வரும் மகாவிஷ்ணு என்பவர் சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டார். அப்போது அவர் பேசுகையில் போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள், இந்த ஜென்மத்தில் கை, கால்களை இழந்து, கண் பார்வையற்றவர்களாக பிறக்கிறார்கள் என பேசினார். அப்போது அங்கிருந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது மகாவிஷ்ணு, அறிவற்றவர் என ஆசிரியரை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பான வீடியோ வைரலானது. இந்நிலையில், என் ஏரியாவுக்குள்ள வந்து என்னுடைய ஆசிரியரை அவமானப்படுத்திட்டு போன உன்னை அவ்வளவு சீக்கிரம் சும்மா விடமாட்டேன். சொற்பொழிவாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.