Avaniyapuram Jallikattu2024 | அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. திமிறும் காளைகள்! போட்டி போடும் மாடு பிடி வீரர்கள்!

Avaniyapuram Jallikattu | தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் தொடங்கியது. சீறிப்பாய்ந்து வரும் காளைகளை மாடு பிடி வீரர்கள் தங்களது கிடுக்கு பிடியால் மாடுகளை பிடிக்க போட்டி போட்டு வருகின்றனர்.

First Published Jan 15, 2024, 10:30 AM IST | Last Updated Jan 15, 2024, 10:30 AM IST

பொங்கல் பண்டிகை வந்துவிட்டாலே, மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப்போட்டிகள்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். தமிழர்களுடைய வீரத்தை நிரூபிக்கும் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு மதுரையில் அவனியாபுரத்தில் தான் பொங்கல் தினத்தில் தொடங்கும், இதனை தொடர்ந்து அடுத்த, அடுத்த நாட்களில் பாலமேடு, அலங்கநல்லூர் போன்ற இடங்களில் நடைபெறும், தமிழர்களுடைய வீர விளையாட்டை பார்க்க பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மதுரையில் முகாமிடுவார்கள். விறு, விறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்கநாணயம், பீரோ, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்படும். இதே போல வீரர்களிடம் சிக்காமல் தப்பிக்கும் காளைகளுக்கும் பரிசு வழங்கப்படும்.

Video Top Stories