திமுகவுடன் கூட்டணி.. சிதம்பரத்தில் போட்டியிடும் திருமாவளவன் - ம.நீ.ம தலைவர் கமலை சந்தித்து வாழ்த்து பெற்றார்!

Thirumavalavan Met Kamalhaasan : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலை சந்தித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.

First Published Mar 22, 2024, 11:59 PM IST | Last Updated Mar 22, 2024, 11:59 PM IST

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி துவங்க உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் கூட்டணி குறித்த தகவலை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் உலக நாயகன் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுகவுடன் இணைந்து இந்த தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தது. அதே போல விடுதலை சிறுத்தைகள் கட்சியும், திமுகவுடன் இணைந்து களம்காண்கிறது.  

இந்நிலையில் வரும் 2024 இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியின் சார்பாக சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. திருமாவளவன் அவர்களும், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ரைட்டர் ரவிக்குமார் அவர்களும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், திரு. கமல்ஹாசனை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Video Top Stories