Vision Kovai : ஐநூறு நாளில் நிறைவேற்றப்படும் 100 வாக்குறுதிகள் - பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த உறுதி!

Vision Kovai BJP Manifesto : வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக பாஜக தங்களது 100 வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. 

First Published Apr 12, 2024, 7:18 PM IST | Last Updated Apr 12, 2024, 7:18 PM IST

500 நாட்களில் இந்த 100 கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று தமிழக பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அறிவித்திருக்கிறார் அவர் வெளியிட்ட அறிக்கையில்... 

கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டு மக்கள் குறை தீர்ப்பு மையமாக அது செயல்படும். 

கோவை விமான நிலையத்தை உலக தரத்திற்கு விரிவாக்கம் செய்து சர்வதேச விமான முனையமாக மேம்படுத்தப்படும் கோவை மெட்ரோ திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படும். 

தமிழகத்தில் இரண்டாவது இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் ஐ எம் கோவையில் நிறுவப்படும் 

விவசாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான ஆனைமலை நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும் கோவையின் ஜீவநதியாக இருக்கும் நோயில் நதி மற்றும் அதன் கிளை நதியான கௌசிகா நதிகளை மீட்டெடுத்து கோவையின் நீர் வளம் மேம்படுத்தப்படும். 

விசைத்தறி உரிமையாளர்கள் பயன்பெறும் வண்ணம் பவர் டெக்ஸ் திட்டம் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் பவர் டெக்ஸ் திட்டத்தின் கீழ் சூரிய மின் தகடுகள் அமைக்க மற்றும் சாதாரண விசைத்தறிகளை நாடா இல்லாத விசைத்தறிகளாக மாற்ற வழங்கப்படும் மானியத் தொகை உயர்த்தி வழங்கப்படும் 

கோவையில் NIA மற்றும் NCB கிளை அலுவலகங்கள் அமைக்கப்படும் 

கோவையில் ஆட்டோமோட்டிவ் காரிடார் அமைக்கப்படும் கோவை டிபன்ஸ் கார்டரில் செமி கண்டக்டர்களை தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகத்திடம் வலியுறுத்தப்படும். 

கோவை பாராளுமன்றத்தில் மத்திய அரசின் நான்கு நவோதயா பள்ளிகளை அமைத்து நமது குழந்தைகளுக்கு உலக தரம் வாய்ந்த கல்வி கிடைக்க வழிவகை செய்யப்படும். 

கோவையின் விளையாட்டு வீராங்கனைகளுக்கு சிறப்பான பயிற்சி கிடைப்பது உறுதி செய்ய ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டு பயிற்சி மையங்களில் ஒன்றான தேசிய விளையாட்டு ஆணையம் பட்டியாலாவின் கிளை பயிற்சி மையம் கோவையில் அமைக்கப்படும். 

கோவை பாராளுமன்றத்தில் 250 மக்கள் மருந்தகங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். 

வயோதிகர்களுக்கு உடல் ரீதியான மற்றும் உளவியல் ரீதியான சிறப்பு மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய கோவையில் உலகத்தரம் வாய்ந்த தேசிய முதியோர் நல மருத்துவ மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் 

நாடு முழுவதும் உள்ள புராதானமான ஆன்மிக தளங்களுக்கு கோவையில் இருந்து 10 புதிய ரயில்கள் இயக்கப்படும் சபரிமலை யாத்திரையை ஒருங்கிணைக்க உதவி மையம் அமைக்கப்படும் 

கொங்கு மண்டலத்தில் மத்திய அரசின் உதவியோடு உயர்தர புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை நிறுவப்படும் ஆயுஷ்மான் பாரத் திட்ட பயனாளிகளுக்கு இம்ம மருத்துவமனையில் இலவச சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

காமராஜர் அவர்களின் நினைவாக அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு கோவை மாநகரில் 3 உணவு வங்கிகள் திறக்கப்படும். 

திருச்சி பொன்மலையில் உள்ளது போன்று கோவை போத்தனூர் அல்லது வட கோவையில் ரயில்வே பணிமனை அமைத்து புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் 

கோவை மக்கள் தென் தமிழகம் விரைந்து செல்ல அவர்களின் பயன்பாட்டிற்காக கோவை கன்னியாகுமரி கோவையில் இருந்து கொச்சி வெளியே திருவனந்தபுரம் வரை புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் 

கோவை திருச்சி சாலை புதிய ஆறு வழி சாலையாக விரிவாக்கப்படும் கோவை கரூர் இடையே எட்டு வழி சாலை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.