Asianet News TamilAsianet News Tamil

பழனி அருகே ஆறு கால்களுடன் பிறந்த கன்று குட்டியை ஆவலுடன் பார்த்து செல்லும் கிராம மக்கள்

பழனி அருகே 6 கால்களுடன் பிறந்த அதிசய கன்று குட்டியை ஆவலுடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள்.

First Published Apr 9, 2024, 6:58 PM IST | Last Updated Apr 9, 2024, 6:58 PM IST

பழனி அருகே தும்பல பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். விவசாயத்துடன் ஆடு, மாடு வளர்ப்பையும் தொழிலாக செய்து வருகிறார். சக்திவேல் வளர்த்த பசுமாடு இன்று ஒரு கன்று குட்டியை ஈன்றது. கன்று ஈனுவதற்கு பசுமாடு சிரமப்பட்ட நிலையில் சக்திவேல் கால்நடை மருத்துவரை அழைத்துள்ளார். 

வண்ணப்பட்டி கால்நடை மருத்துவமனை மருத்துவ உதவியாளர் உடனடியாக வந்து பசு மாட்டிற்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளித்துள்ளார். சிறிது நேரத்தில் பசுமாடு ஆறு கால்களுடன் கூடிய கன்றை ஈன்றது. வழக்கமாக நான்கு கால்களுடன் இருக்கக்கூடிய பசுங்கன்று ஆறு கால்களுடன் பிறந்ததால் கிராம மக்கள் அதிசய கன்று குட்டியை ஆவலுடன் பார்வையிட்டு சென்றனர். மரபணு குறைபாடு காரணமாக இதுபோன்று சில சமயங்களில் கன்றுகள் பிறப்பதாக பழனி கால்நடைதுறை உதவி இயக்குனர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Video Top Stories