நீலகிரியில் குடியிருப்பு பகுதிகளில் சுதந்திரமாக உலா வரும் சிறுத்தை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஈளாடா பகுதியில் குடியிருப்பின் அருகே சிறுத்தை புலி ஒன்று சுதந்திரமாக உலா வரும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேமராவில் பதிவாகி உள்ள சிறுத்தை புலியின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு, சாலைகள், தேயிலை தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி கரடி, காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருவது வாடிக்கையாகி உள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக தேயிலை தோட்டத்தில் சிறுத்தைபுலி உலா வருவதை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், இரவு நேரங்களில் குடியிருப்பு அருகே உலா வரும் சிறுத்தை சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. சிறுத்தையின் நடமாட்டத்தை் தொடர்ந்து கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.