Aadi Amavasi : ஆடி அமாவாசை..! முன்னோர்களுக்கு திதி... குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்- திணறும் ராமேஸ்வரம்

ஆடி அமாவாசை தினத்தை ஒட்டி மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து துதி  கொடுத்தால் மோட்சம் என்ற ஐதீகம் உள்ளது. இந்தநிலையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 

First Published Aug 4, 2024, 11:06 AM IST | Last Updated Aug 4, 2024, 11:06 AM IST

ஆடி அமாவாசை

ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை சிறப்புக்குரியதாகும். அந்த வகையில்  தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து துதி  கொடுத்தால் மோட்சம் என்ற ஐதீகம் உள்ளது. இதற்காக ராமேஸ்வரத்தில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள். இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். சிறப்பு பேருந்து மற்றும் ரயில்களும் இயக்கப்படும். இந்தநிலையில் இன்று ஆடி அமாவாசையையொட்டி லட்சக்கணக்கான மக்கள் ராமேஸ்வரத்தில் கூடியுள்ளனர். 

இந்த நிலையில் இன்று  ஆடி அமாவாசை தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்தில் வந்திருந்த பல லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிவிட்டு தம்மோடு வாழ்ந்து மறைறந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி கொடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர். இதனை தொடர்ந்து கோயிலில் அம்பாளை தரிசனம் செய்து வருகின்றனர். ஆடி அமாவாசையையொட்டி லட்சக்கணக்கான மக்கள் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ள காரணத்தால் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.