விரைவில் ஆளுநர் ரவி விரட்டப்படும் நாள் வரும் - எம்பி கனிமொழி பேச்சு
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் தனது உரையை நிகழ்த்தாமல் சட்டப்பேரவையை அவமானம் செய்ததாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. இந்தநிலையில் ஆளுநர் ரவியை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரையோடு சட்டப்பேரவை கூடுவது வழக்கமாகும், அந்த வகையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த ஆளுநர் ரவி, சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லையென கூறி வெளியேறினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் ரவியை கண்டித்து திமுக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதில் கலந்து கொண்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழகத்தில் இருந்து விரைவில் ஆளுநர் விரட்டப்படும் நாள் வரும் என ஆவேசமாக கூறினார்.