நீலகிரி மாவட்டத்தில் நாவல் பழ விளைச்சல் அதிகரிப்பு - ஒரு கிலோ ரூ.200க்கு விற்பனை!
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் சாலையோரங்களிலும், வனப்பகுதிகளிலும் ஏராளமான நாவல் மரங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் நாவல் பழ சீசன் உள்ளது.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் சாலையோரங்களிலும், வனப்பகுதிகளிலும் ஏராளமான நாவல் மரங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் நாவல் பழ சீசன் உள்ளது. அதன்படி சீசன் காரணமாக தற்போது கோத்தகிரியில் நாவல் பழ விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனை பொதுமக்கள் பறித்து மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கிலோ நாவல் பழம் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.