Safety Box : பெண்களுக்கான பாலியல் ரீதியான புகார் குறித்து பாதுகாப்பு பெட்டி அறிமுக விழா
பெண்களுக்கான பாலியல் ரீதியான புகார் குறித்து பாதுகாப்பு பெட்டி அறிமுக விழா. தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.
தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான பாலியல் ரீதியான புகார் குறித்து பாதுகாப்பு பெட்டி திட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெட்டி அறிமுக விழா திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து அணைப்புதூரில் நடைபெற்றது. இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு, பாதுகாப்பு பெட்டியை முதல் முறையாக அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் திருப்பூர் மேயர் தினேஷ்குமார் நான்காம் மண்டல தலைவர் இல பத்மநாபன் ஏற்றுமதி நிறுவனத்தார், தொழில் துறையினர் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.