எங்கம்மாவோட தாலி நகைகளை அடகு வைச்சு பேனர் மிஷின் வாங்கினேன்... இப்போ மொத்தமா போச்சே... அம்மாவுடன் கதறும் பேனர் கடைக்காரர்..!
பேனர் அச்சிடும் உரிமையாளர் ஒருவர் தனது அம்மாவுடன் பேனர் தடை பற்றி, மிகவும் வேதனையையோடு தன் சோகத்தை பகிர்ந்து கொடுள்ள வீடியோ தற்ப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
சென்னை பள்ளிக்கரணை அருகே கடந்த வாரம், அதிமுக சார்பாக வைக்கப்பட்டிருந்த பேனர், சுபஸ்ரீ என்கிற இளம் பெண் மீது விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழேயே விழுந்தார். அப்போது அவர் பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியதில், லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலே உடல் நசுங்கி உயிரிழந்தார் சுபஸ்ரீ. இச்சம்பவம் தமிழகத்தில் மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் தங்களுக்கு பேனர் வைப்பது குறித்தும், இதனை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இதற்குமேல் யாரும் பேனர் வைக்க கூடாது என்றும் பேனர் அச்சிட தடை செய்ய வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பலர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பேனர் அச்சிடும் உரிமையாளர் ஒருவர் தனது அம்மாவுடன் பேனர் தடை பற்றி, மிகவும் வேதனையையோடு தன் சோகத்தை பகிர்ந்து கொடுள்ள வீடியோ தற்ப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது