Asianet News TamilAsianet News Tamil

நெஞ்சை உலுக்கிய சுபஸ்ரீயின் மரணம்.. வெளியான மற்றொரு வீடியோ..!

சுபஸ்ரீயை காப்பாற்ற வேண்டும் என அங்கிருந்தவர்கள் முயன்றுள்ளார்கள் ஆனால் விபத்து நடந்து 15 நிமிடங்கள் மட்டுமே சுபஸ்ரீ உயிருடன் இருந்துள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில் நேற்று முன்தினம் அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவிற்காக சாலை முழுவதும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அப்போது,  சாலையில் இரு சக்கர  வாகனத்தியில் சுபஸ்ரீ என்கிற இளம் பெண் வந்தபோது, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று, திடீர் என அவர் மீது விழுந்து. 

பெண் இன்ஜினியர் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்.. அதனை தொடர்ந்து சுபஸ்ரீ விபத்தில் சிக்கி அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதில் சுபஸ்ரீ விபத்தில் சிக்கியுடன் தண்ணீர் கேட்டு கதறியுள்ளார். அப்போது அருகில் இருந்தார்கள் சுபஸ்ரீக்கு உதவியுள்ளார்கள். உடனே 108ஆம்புலன்ஸுக்கு அழைத்துள்ளார்கள். ஆனால் ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஆக, அங்கிருந்த லோடு ஆட்டோவில்  சுபஸ்ரீயை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

சுபஸ்ரீயை காப்பாற்ற வேண்டும் என அங்கிருந்தவர்கள் முயன்றுள்ளார்கள் ஆனால் விபத்து நடந்து 15 நிமிடங்கள் மட்டுமே சுபஸ்ரீ உயிருடன் இருந்துள்ளார். ஆனால் இறுதியில் அனைத்து முயற்சியும் தோல்வியுற்று சுபஸ்ரீயின் உயிர் பறிபோனது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட காட்சி நெஞ்சை உலுக்கும் வகையில் இருக்கின்றன.

Video Top Stories