விநாயகர் சிலையை இனி கரைக்க விடமாட்டோம்..! அரசுக்கு எச்சரிக்கை விடும் செ.நல்லசாமி..
மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க காவிரி ஆற்றை ஒட்டியுள்ள குளம் குட்டைகளில் உபரிநீரை நிரப்பும் திட்டத்தை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவேண்டும்.
பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு நிகழ்ச்சிக்கு வந்த கீழ்பவானி பாச விவசாயிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.
விநாயகர் சதுர்த்தி விழாவின்போது வைக்கப்படும் சிலைகள் கீழ்பவானி வாய்க்காலில் கரைக்கப்படுகிறது. இந்த ஆண்டு சிலைகளை கீழ்பவானி வாய்க்காலில் கரைக்க விடமாட்டோம்.
காவிரியில் தினந்தோறும் நீர் பங்கீடு முறையில் நீரை பெற்றிருந்தால் அதிகப்படியான உபரிநீர் கடலில் கலப்பதை தவிர்த்திருக்கலாம். மாதாந்திர அடிப்படையில் என்ற முறையை கர்நாடக அரசு பின்பற்றாமல் கர்நாடகாவில் அணைகள் நிரம்பியபின் அணைகளின் பாதுகாப்பு கருதி திறக்கப்படும் உபரி நீர் மேட்டூர் அணையில் நிரம்பி பின்னர் வீணாக கடலுக்கு செல்கிறது.
கடந்த 86 ஆண்டுகளில் மேட்டூர் அணையில் மட்டும் 40 முறை அணை நிரம்பி உபரி நீர் கடலில் கலந்து வீணாகியுள்ளது. இதுபோன்ற காலங்களில் காவிரி ஆற்றை ஒட்டியுள்ள து¬ண் ஆறுகள், குளம் குட்டைகளுக்கு உபரி நீரை திருப்பியிருக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.