Watch : வக்பு வாரிய சொத்து தொடர்பான அறிவிப்புக்கு பின்னணியில்"ஜி-ஸ்கொயர்" நிறுவனம் - சீமான் குற்றச்சாட்டு

வக்பு வாரிய சொத்து தொடர்பான அறிவிப்புக்கு பின்னணியில்"ஜி-ஸ்கொயர்" நிறுவனம் - சீமான் குற்றச்சாட்டு

First Published Sep 20, 2022, 9:35 AM IST | Last Updated Sep 20, 2022, 9:35 AM IST

திருச்சி விமான நிலையத்தில் மதிமுகவினருக்கும்,நாம் தமிழருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் ஏற்பட்ட மோதல் குறித்த வழக்கு திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், புதிய கல்விக் கொள்கையால் அனைத்து தேசிய இனங்களின் மொழிகளும் அழியும்.அவர்களின் நோக்கம் இந்தி,சமஸ்கிருதத்தை வளர்ப்பது தான். புதிய கொள்கை குழந்தைகளுக்கான மரண சாசனம் என்றார்.

நீட் தேர்வுக்கு முன்பாகவே நல்ல மருத்துவர்கள் உருவாகி இருக்கிறார்கள். பிரதமர் மோடிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவம் பார்ப்பது ஏற்கனவே இருந்த மருத்துவர்கள் தானே என்றும் தெரிவித்தார்.

வக்பு வாரிய சொத்து தொடர்பான அறிவிப்புக்கு பின்னணியில்"ஜி-ஸ்கொயர்" நிறுவனம் உள்ளது. அவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள சொத்துக்களை வாங்கி குவிக்கிறார்கள். இனிமேல் வரும் அரசாங்கம் ஏதும் இடம் தேவை என்றாலும் அவர்களிடம் இருந்து தான் வாங்க வேண்டும். "ஜி- ஸ்கொயர்" சொத்துகள் குறித்த வில்லங்கள் வெளியில் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக தான், பத்திரப்பதிவு அலுவலகத்தில் வில்லங்க சான்றிதழ் பெறமுடியாத நிலையை அவர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

மதங்கள் இல்லை என்று சொல்பவரை செருப்பால் அடிப்பேன் என்று நடிகர் மயில்சாமி கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, மதங்கள் இல்லை என்று யாரும் சொல்லவில்லை எது தங்கள் சமயக் கோட்பாடு என்பதில் தான் வேறுபாடு உள்ளது என சீமான் தெரிவித்தார்.

Video Top Stories