Asianet News TamilAsianet News Tamil

மேட்டூர் அணையை திறந்து வைத்தார் எடப்பாடி..! மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..

மேட்டூர் அணை திறக்கப்பட்டிருப்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்துவிடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. 

அதன்படி இன்று சேலம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரியாற்றில் தண்ணீரை திறந்துவிட்டார். அணையில் இருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து காவிரி ஆற்றில் சென்றபோது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவினார்.

பின்னர் பேசிய முதலமைச்சர், மேட்டூர் அணையில் இருந்து தற்போது தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதால், டெல்டா பகுதியில் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் என்றும், கால்வாய் பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் என்றும் குறிப்பிட்டார். 

மேட்டூர் அணை திறக்கப்பட்டிருப்பதால் நாமக்கல் பள்ளிபாளையம் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Video Top Stories