கோவையில் பரபரப்பு.. காம்பவுண்ட் கேட்டை திறந்து டூவீலரை திருடி சென்ற துணிகரம் - CCTV உதவியுடன் தேடும் போலீசார்!

Coimbatore Bike Theft : கோவை சரவணம்பட்டி அடுத்துள்ள சின்ன மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி 55 தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 

First Published Feb 4, 2024, 9:50 PM IST | Last Updated Feb 4, 2024, 9:50 PM IST

அய்யாசாமியின் மகன் அரவிந்த் (வயது 31) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் காம்பவுண்ட் கேட்டை திறந்து அவர் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் இருவர் சுற்றிலும் நோட்டமிட்டு விட்டு அங்கிருந்த பல்சர் பைக்கை திருடி சென்றனர். 

இது குறித்து பாதிக்கப்பட்ட அரவிந்த், சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த துணிகர சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Video Top Stories