மார்க்கெட் நடுவில் கெத்தாக பீர், தம் அடித்த பெண்.. வீடியோ வைரல் ஆனதால் கைது.!
சிகரெட் மற்றும் மது அருந்தி கொண்டிருக்கும் பெண்ணின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் ஆட்டோவில் அமர்ந்து கொண்டு சிகரெட் மற்றும் மது அருந்தி கொண்டிருக்கும் பெண்ணின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனைத்தொடர்ந்து அந்தப் பெண்ணுடன் இருந்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்தப் பெண்ணின் பெயர் கௌசல்யா என்பதும் அந்தப் பெண்ணை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.