Asianet News TamilAsianet News Tamil

கோவை.. பஸ்டாண்டில் செல் போன் திருடிய ஆசாமி.. 5 நிமிடத்தில் விரட்டி பிடித்த தலைமை காவலர் - குவியும் பாராட்டு!

Coimbatore : கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில், செல்போன் திருடனை விரட்டி பிடித்த தலைமைக் காவலர் கந்தசாமிக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ், தனது குடும்பத்துடன் கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தவர் ஈஷா யோகா மையம் சென்று திரும்பி வரும் பொழுது பேருந்தில் அவர் பையில் இருந்த மொபைல் போன் காணாமல் போயுள்ளது. சட்டென்று பதறிப் போனவர், தனது மொபைலை காணவில்லை என ராஜ் காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் காவல் நிலையத்தில் பணியில் இருந்த தலைமை காவலர் கந்தசாமியிடம் புகார் அளித்துள்ளார். 

உடனே அவர் முத்துகிருஷ்ணன் மற்றும் மதன் ஆகிய காவலர்களுடன் உடனே சோதனை மேற்கொள்ள சென்றார். அப்பொழுது மொபைல் போனை திருடியவன் தப்பி போடுவதை கண்ட காவல்துறையினர் ஓடிச்சென்று அவரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் இந்த துரித செயலை கண்டு பயணிகள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Video Top Stories