நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகைப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
நடிகர் திலகம் சிவாஜி கணேகசனின் 95வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படும் நி்லையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95வது பிறந்த நாள் விழா இன்று அவரது ரசிகர்களால் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள சிவாஜ கணேசன் மணிமண்டபத்தின் வெளியில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு அருகில் உள்ள புகைப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.