வெள்ளத்தில் சிக்கிய பசு மாடு.. மீட்ட சென்னை மாநகராட்சி ஊழியர்கள் - குவியும் பாராட்டுக்கள்!

வெள்ளத்தில் சிக்கிய பசு மாட்டினை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மீட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

First Published Nov 13, 2022, 4:31 PM IST | Last Updated Nov 13, 2022, 4:31 PM IST

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி, உள்ளாட்சி ஊழியர்கள் தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, ஆலந்தூர் பகுதியில் தூய்மை பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

156வது பகுதிக்குட்பட்ட பகுதியில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பசு மாடு ஒன்று மழைநீர் வடிகாலில் சிக்கி தவித்தது. இதனை கண்ட சென்னை மாநகராட்சி ஊழியர்கள்  உடனே பசு மாட்டினை அதிலிருந்து மீட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மழைநீர் வடிகாலில் சிக்கித்தவித்த பசுவை தூய்மைப் பணியாளர்கள் மீட்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க..அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை ஊத்தப்போகுது.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ? முழு விபரம்

இதையும் படிங்க..பாஜகவில் சேரப் போகும் முக்கிய தலைகள்.. திமுக எங்கள் எதிரி தான், ஆனால் ? அண்ணாமலை சொன்ன சீக்ரெட் !