நேருக்கு நேர் காரும் லாரியும் மோதி கோர விபத்து..! அதிர்ச்சி வீடியோ

புஞ்சை புளியம்பட்டி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

First Published Aug 8, 2019, 5:06 PM IST | Last Updated Aug 8, 2019, 5:06 PM IST

புஞ்சைபுளியம்பட்டி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அருகே பொன்மேடு பகுதியில் நள்ளிரவு 1.30 மணியளவில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 உயிரிழந்தனார் திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே ஆலத்தூர் மேடு பகுதியில் உள்ள சென்னியப்பா ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வரும் மில் உதவி மேலாளர் ஜெய்கணேஷ், சூப்பர்வைசர்கள் கோவிந்தராஜ், தங்கபாண்டியன், பாரதிராஜா, வீரராகவன், ஸ்பின்னிங் மாஸ்டர் சங்கர் ஆகிய 6 பேரும் நள்ளிரவில் மில்லில் இருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள புஞ்சைபுளியம்பட்டி  செல்வதற்காக காரில் சென்றுகொண்டிருந்தனர்.

காரை கோவிநற்தராஜ் என்பவரை ஓட்டி வந்துள்ளார் அப்போது கர்நாடக மாநிலத்திலிருந்து காப்பிக்கொட்டை பாரம் ஏற்றிய லாரி விருதுநகர் செல்வதற்காக புஞ்சைபுளியம்பட்டி - திருப்பூர் சாலையில் சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் பொன்மேடு என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது கார் லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரின் மன்பாகம் நசுங்கியதில் ஜெய்கணேசன், தங்கபாண்டியன், சங்கர் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற புஞ்சைபுளியம்பட்டி போலீசார் படுகாயமடைந்த வீரராகவன், கோவிந்தராஜ், பாரதிராஜா ஆகிய 3 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த 3 பேரின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வீரராகவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Video Top Stories