தண்ணிரில் மாட்டின் மீது ஏறி Tik Tok செய்த வாலிபர்..! பிணமாக மீட்ட வைரல் வீடியோ..
தண்ணிரில் மாட்டின் மீது ஏறி Tik Tok செய்த வாலிபர்..! பிணமாக மீட்ட வைரல் வீடியோ..
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி ராயர்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் விக்னேஸ்வரன்(23). அந்த பகுதியில் தறித்தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். விக்னேஸ்வரன் டிக் டாக் செயலியை அதிகமாக பயன்படுத்தி வந்திருக்கிறார். தினமும் டிக் டாக்கில் தான் நடித்து விடியோவை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதனிடையே காளை மாட்டை குளிப்பாட்டுவதற்காக நண்பர்கள் பரமேஸ்வரன், புவனேஸ்வரன், மாதவன் ஆகியோருடன் கடந்த புதன்கிழமை வடுகபாளையத்திலுள்ள குட்டைக்குச் சென்றுள்ளனர். அங்கு காளையை குளிப்பாட்டி கொண்டிருந்தபோது, மாட்டின் மீது ஏறி குதித்து மூவரும் டிக் டாக் வீடியோ எடுத்து கொண்டிருந்தார்கள். பின்னர் வீட்டுக்கு வந்தவர்கள் அந்த வீடியோவை பார்த்து ரசித்தனர். இதுபோன்று வீடியோ எடுத்தால் நன்றாக இருக்கும் என எண்ணிய விக்னேஸ்வரனும், அவரது நண்பர்களும், மறுநாளும் அதேபோல் டிக் டாக் வீடியோ எடுக்க முடிவு செய்துள்ளனர்.
மீண்டும் காளையை குட்டையின் உள்ளே கூட்டி சென்ற அவர்கள், அதன் மீது ஏறி குதித்தும், அதனை நீரில் அமிழ்த்தியும் விளையாடியபடி டிக் டாக் வீடியோ எடுத்துள்ளனர். முதலில் அமைதியாக இருந்த காளை திடீரென மிரண்டு போக, விக்னேஸ்வரனை ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத விக்னேஸ்வரன், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். நீச்சல் தெரியாமல் தத்தளித்த அவரை, அவரது நண்பர்களும் காப்பாற்ற முடியாமல் போனது.
இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடி விக்னேஸ்வரனை பிணமாக மீட்டனர்.பின்னர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனிடையே வாலிபர் பலியான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.