ரத்தம் சொட்டச் சொட்ட நேர்த்திக் கடன்..! இஸ்லாமியர்களின் மொஹரம் வீடியோ..

மொகரம் பண்டிகை இஸ்லாமிய மதத்தில் ரமலானுக்கு அடுத்து மிகவும் புனிதமான மாதமாக கருதப்படுகிறது. நான்கு புனித மாதங்களில் ஒன்றான மொகரம் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் அனுசரிக்கப்படுகிறது. 

First Published Sep 10, 2019, 4:55 PM IST | Last Updated Sep 10, 2019, 4:55 PM IST

மொஹரம் பண்டிகை இஸ்லாமிய மதத்தில் ரமலானுக்கு அடுத்து மிகவும் புனிதமான மாதமாக கருதப்படுகிறது. நான்கு புனித மாதங்களில் ஒன்றான மொஹரம் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் அனுசரிக்கப்படுகிறது. 

சுமார் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆஷூரா நாளில் நபிகள் நாயகத்தின் பேரன் இமாம் உசேன் மற்றும் அவரின் சிறிய மகனும் கர்பலா போரில் கொல்லப்பட்டனர். இமாம் உசேன் கொல்லப்பட்டதையொட்டி கருணை மற்றும் நீதியை பற்றிய செய்தியாக அவரைப் பின்பற்றுபவர்களிடையே  கடைபிடிக்கப்படுகிறது.

மொஹரம் பண்டிகை முன்னிட்டு சியா இஸ்லாமியர்கள் மொஹரத்தையொட்டி சென்னையில் உள்ள ஐஸ் ஹவுஸ் பகுதியில் தங்களைத் தாங்களே அடித்து வருத்திக்கொண்டு ஊர்வலமாகச் சென்று மொஹரம் பண்டிகை அனுசரிக்கப்பட்டது.