ஆளுநர் முறைதவறி மோசமாக நடந்து கொண்டார்; அண்ணாமலையின் பேச்சால் குழம்பிய பாஜகவினர்

பத்திரிகையாளர் சந்திப்பின் போது சபாயாநகர் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக ஆளுநர் முறை தவறி நடந்து கொண்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்தால் பாஜகவினர் குழப்பமடைந்தனர்.

First Published Feb 13, 2024, 11:15 PM IST | Last Updated Feb 13, 2024, 11:15 PM IST

தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்து கொண்டது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பின் போது எடுத்து கூறினார். அப்போது தவறுதலாக சபாநாயகர் அப்பாவு என்று குறிப்பிடுவதற்கு பதிலா சுமார் 2, 3 முறை ஆளுநரையே குறிப்பிட்டு பேசினார்.

ஆளுநர் முறைதவறி நடந்து கொண்டார், திமுகவிரை விட ஆளுநர் மோசமாக நடந்து கொண்டார். ஆளுநர் மாற்றி பேசுகிறார் என்று சபாநாயகருக்கு பதிலாக ஆளுநரை குறிப்பிட்டு பேசியதால் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாஜகவினர் சற்று குழப்பம் அடைந்தனர்.

Video Top Stories