அதிகாலையில் அசால்ட்டா லவட்டிட்டு போன திருடர்கள்..! மாட்டிக்கொண்ட சிசிடிவி காட்சி..

விடியற்காலையில் எந்த ஒரு அச்சமுமின்றி இருசக்கர வாகனதின் சைடு லாக்கை உடைத்து திருடிச்சென்ற சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First Published Sep 18, 2019, 5:24 PM IST | Last Updated Sep 18, 2019, 5:24 PM IST

சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி பல்லப்பன் தெரு, ஐஸ் அவுஸ் பகுதியில் பத்திரிகையாளர் குமார் என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டின் முன்பு மனைவியின் ஸ்கூட்டி நிறுத்தப்பட்டிருந்து. இன்று அதிகாலை 5 மணி அளவில் இரண்டு மர்ம நபர்கள் அந்த வழியில் வந்தனர்.

பின்னர் அக்கம் பக்கம் யாரும் இல்லாததை கண்டு மர்மநபர்கள் ஸ்கூட்டியின் லாக்கை உடைத்து சாதாரணமாக எந்த பயமுமின்றி திருடிச் சென்றனர். இந்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.