பாரத் ஜோடோ பாதயாத்திரையில் இளநீர் பருகிய ராகுல் காந்தி
ராகுல் காந்தி இன்று தனது பாரத் ஜோடோ யாத்திரையை துவக்கி நடந்து வருகிறார்.
ராகுல் காந்தி இன்று தனது பாரத் ஜோடோ யாத்திரையை துவக்கி நடந்து வருகிறார். இந்தப் பயணத்தில் இளநீர் பருகினார். ராகுல் காந்தி நேற்று (செப்டம்பர் 7ஆம் தேதி) கன்னியாகுமரியில் பயணத்தை துவக்கினார்.
தினமும் 20 முதல் 30 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். குஜராத் மாநிலத்திற்குள் செல்லாமல், கன்னியாகுமரியில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், டெல்லி சென்று இறுதியில் ஜம்மு காஷ்மீரில் பயணத்தை முடிக்கிறார்.