கொடி ஏற்றத்துடன் துவங்க இருக்கும் பெசன்ட் நகர் வேளாங்கண்ணி திருவிழா..! பக்தர்களுக்கு சகல வசதிகள்..

47-ஆம் ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 29ம் தேதி வியாழக்கிழமை முதல் செப்டம்பர் எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை கொண்டாடப்பட இருக்கிறது.

First Published Aug 27, 2019, 11:21 AM IST | Last Updated Aug 27, 2019, 11:21 AM IST

பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில் 47 ஆம் ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 29ம் தேதி வியாழக்கிழமை முதல் செப்டம்பர் எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை கொண்டாடப்பட இருக்கிறது.
இந்த பதினோரு நாட்கள் திருவிழாவானது ஆகஸ்டு மாதம் 29-ம் வியாழக்கிழமை அன்று மாலை 5.45 மணிக்கு 12 அடி நீளமுள்ள அன்னையின் திருவுருவம் தாங்கிய திருக்கொடியானது திரு பவனியாக வந்து அர்ச்சிக்கப்பட்ட திருத்தல வளாகத்தில் அமைந்துள்ள 75 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் சென்னை மயிலை  உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு டாக்டர். ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களால் ஏற்றிவைக்கப்படும்.