Watch : ஶ்ரீபெரும்புதூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து! - ஒருவர் பலி! ஒருவர் படுகாயம்!

ஶ்ரீபெரும்புதூர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் ஶ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

First Published Aug 2, 2022, 11:01 PM IST | Last Updated Aug 2, 2022, 11:01 PM IST

சென்னையைச் சேர்ந்த கோபிநாத், மாரிமுத்து இருவரும் இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லியிலிருந்து காஞ்சிபுரத்தை நோக்கி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். இருங்காட்டுக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோபிநாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாரிமுத்து பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டுனர் ஒருவர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாரிமுத்துவை மீட்டு ஶ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஶ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் கோபிநாத் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஶ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Video Top Stories