Asianet News TamilAsianet News Tamil

கலைஞர், ஜெயலலிதா செய்யாததை எடப்பாடி அரசு செய்தது சீர் குலைக்கும் விதமாக உள்ளது..! பகிரங்க குற்றம்சாட்டும் பாரத் இந்து முன்னணி..

சென்னையில் தற்ப்போது விநாயகர் சதுர்த்தி விழா களைகட்ட தொடங்கிவிட்டது. இதனைக் குறித்து பாரத் இந்து முன்னணி மாநில தலைவர் பிரபு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. விநாயகரின் பிறந்த தினமாக கருதப்படும் அன்றைய நாளில் களிமண் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைத்து பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டு அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. தமிழகத்தில் மட்டுமில்லை மும்பை, பெங்களூர், கொல்கத்தா போன்ற நகரங்களிலும் விநாயக சதுர்த்தி மிக மிக சிறப்பாக கொண்டாடப்படும். இதையொட்டி இந்திய முழுவதும் வீட்டில் வைத்து பூஜை செய்யும் வகையில் சிறிய அளவிலான சிலைகள் மற்றும் 4 அடியிலிருந்து 9 அடி உயரம் வரையிலான பெரிய சிலைகளும் தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.குறிப்பாகக சென்னையில் தற்ப்போது களைகட்ட தொடங்கிவிட்டது.

Video Top Stories