நடுக்கடலில் தேசியக்கொடி ஏற்றி அசத்திய இளைஞர்.. சுவாரசிய வீடியோ

நேற்று சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது 

First Published Aug 16, 2019, 6:37 PM IST | Last Updated Aug 16, 2019, 6:38 PM IST

புதுச்சேரியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி மையத்தை நடத்தி வருபவர் அரவிந்த இவர் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு கடலில் நீச்சல் பயிற்சி அளித்து வருகிறார்.

 கடலில் உள்ள உயிரினங்களை பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுதந்திர தினத்தன்று நடுக்கடலில் தேசிய கொடி ஏற்ற அரவிந்த முடிவு செய்தார் அதன்படி நேற்று காலை பாதுகாப்பு உடை அணிந்து அரவிந்த் உள்ளிட்ட நீச்சல் வீரர்கள் தேசியக் கொடியுடன் நடுக்கடலில் நீந்தியபடி 5 கிலோ மீட்டர் தூரம் சென்றனர் பின்னராக நடுக்கடலில் 60 அடி ஆழத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்  இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது

இதுகுறித்து அரவிந்த் கூறுகையில் கடல்வாழ் உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டுமானால் கடலின் ஆழப் பகுதியில் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என்றும் இதனை குறித்து மீனவரக்ளுக்கு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நடுக்கடல் தேசிய கொடி ஏற்றி வைத்தோம் என்றார் கூறினார்